அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு. அவர் மீது வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதை தொடர்ந்த விஜய் பாபு தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விஜய் பாபுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. தான் குற்றவாளி அல்ல என நிரூபணமாகும் வரை நடிகர் சங்கத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறி விஜய் பாபு கடிதம் கொடுத்திருப்பதாகவும், அந்த கடிதத்தை ஏற்று கொள்வதாகவும் நடிகர் சங்க நிர்வாக குழு தெரிவித்தது.
இதற்கு நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் பாபுவை நடிகர் சங்கத்தில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மலையாள நடிகர் சங்கம் செவி சாய்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க புகார் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி, குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் நடிகர் சங்கத்திற்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய நடிகர் திலீபை நீக்க வேண்டும் என்று நடிகைகள் குரல் எழுப்பிய பிறகு அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.