ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் ஒழிவு திவசத்தே கலி, செக்சி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனல்குமார் சசிதரன். 2020ல் மஞ்சு வாரியார் நடிப்பில் காயாட்டம் என்கிற படத்தை இவர் இயக்கினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை மஞ்சுவாரியரை தான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் போனை எடுக்கவில்லை எனவும், குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவரிடமிருந்து தனக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. மஞ்சுவாரியார் தற்போது ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறார். அவரது மேனேஜர்கள் மூலமாக அவருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது என்பது போன்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் கொச்சி போலீசாரிடம் சனல்குமார் சசிதரன், தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், சோசியல் மீடியா பக்கத்தில் தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்புவதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் போலீசார் இயக்குனர் சனல்குமார் சசிதரனை தங்களது காவலில் எடுத்துள்ளனர். இதையடுத்து அவரை மஞ்சுவாரியார் புகார் கொடுத்துள்ள கொச்சி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று இதுபற்றி விசாரிக்க உள்ளனர்,
இதுபற்றி மலையாள திரையுலகில் சிலர் கூறும்போது, “காயாட்டம் படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோது இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மஞ்சுவாரியர் இயக்குனருடன் பெரிய அளவில் தொடர்பில் இல்லை என்றும் சொல்கிறார்கள். அதேசமயம் மஞ்சுவாரியர் மீது இப்படி திடீரென தேவையில்லாமல் அவர் ஆபத்தில் இருப்பதாக சோசியல் மீடியா மூலமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருப்பதில் நிச்சயமாக ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே பலரும் கூறுகின்றனர். போலீசார் விசாரணையில் சனல்குமார் சசிதரன் ஏன் இப்படி செய்தார் என்கிற உண்மை தெரிய வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.