சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு |
தமிழில் கடந்த சில வருடங்களாக மலையாள நடிகையான நயன்தாரா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே தமிழ் நடிகைகள் நம்பர் 1 இடத்தில் இருப்பதில்லை. அதை வேற்று மொழி நடிகைகள்தான் தட்டிப் பறிக்கிறார்கள். நயன்தாராவுக்கு முதிர்ச்சிகரமான தோற்றம் வர ஆரம்பித்துவிட்டது. அதனால், அவருடைய முதலிடத்தைத் தட்டிப் பறிக்க பலர் தயாராகி வருகிறார்கள்.
அதில் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தானா ஆகியோருக்குள் கடும் போட்டிகள் இருக்கலாம். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பீஸ்ட்' படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். சமூக வலைத்தளங்களில் பூஜா பதிவிடும் போட்டோக்களுக்கு அவருக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் கிடைக்கும்.
நேற்று தனது இன்ஸ்டாவில் டெனிம் கவுன் அணிந்து மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து போட்டுத் தாக்கியுள்ளார் பூஜா. ஒரே நாளில் 14 லட்சம் லைக்குகள் அந்தப் பதிவுக்கு. ஒரு காலத்தில் ரம்பாவைத் தொடையழகி என்று வர்ணித்தார்கள். இப்போது பூஜாவின் இந்த புகைப்படங்களைப் பார்த்தால் இவரைத்தான் தொடையழகி என்று சொல்வார்கள்.