‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று(ஏப்.,11) முதல் ஆரம்பமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்குள்ள படப்பிடிப்புத் தளத்தில் சென்னை, அண்ணா சாலை போன்ற பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளதாம். அஜித் அவருடைய படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடத்துகிறார். நடிப்பதுதான் தமிழில், ஆனால், படப்பிடிப்பு முழுவதும் தெலுங்கு மாநிலத்திலேயே நடக்கிறது.
சென்னையில் தனது படங்களின் படப்பிடிப்பை அஜித் நடத்துவதே இல்லை. ஆனால், விஜய் அப்படியல்ல. அவருடைய படங்களின் பெரும்பாலான படப்பிடிப்பை சென்னையில் தான் நடத்தச் சொல்வாராம். அப்போதுதான் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நல்லெண்ணமே அதற்குக் காரணம்.
விஜய் அடுத்து நடிக்கும் அவருடைய 66வது படத்தின் பூஜை கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தயாரிப்பவர், இயக்குனர் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இங்குள்ள தொழிலாளர்களக்கு வருமானம் கிடைக்க வேண்டுமென படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தச் சொல்லியிருக்கிறாராம் விஜய்.
அஜித்தும் அது போல செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் மத்தியில் குரல்கள் ஒலிக்கிறது.