சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

கார் ரேஸில் பிசியாக இருக்கும் அஜித் தனது மனைவி, மகன், மகள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், ‛‛நான் சினிமா, ரேஸில் பிசியாக இருக்கும் போது என் மனைவி வீடு, குடும்பத்தை கவனித்து கொள்கிறார். நான் குழந்தைகளை மிஸ் பண்ணுகிறேன். அவர்களும் என்னை பல நேரம் மிஸ் பண்ணுகிறார்கள். நான் நேசிக்கும் சில விஷயங்களுக்காக சில தியாகங்களை செய்ய வேண்டியது உள்ளது.
என் குழந்தைகள் சினிமா, ரேஸிங் செல்ல கட்டாயப்படுத்த மாட்டேன். அது அவர்கள் விருப்பம். அவர்கள் விரும்புவதை செய்ய நான் ஆதரவு கொடுப்பேன். இப்போது என் மகனுக்கு கார் ரேஸில் ஆர்வம் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஸ்பெயின் கார் ரேசில் அஜித் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்து ஸ்பெயினில் இந்த மாதம் இரண்டு போட்டியிலும், அடுத்த மாதம் இரண்டு போட்டியிலும் அவர் அணி கலந்து கொள்கிறது.