தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் |

அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரித்துள்ள படம் 'மருதம்'. வி.கஜேந்திரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கதையின் நாயகனாக விதார்த்தும், நாயகியாக தர்ஷனாவும் நடித்துள்ளனர். இவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கிய 'மார்கழி திங்கள் 'படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இவர்கள் தவிர அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் நாயகி ரக்ஷனா பேசியதாவது: மருதம் என் இரண்டாவது படம், கடவுளுக்கு நன்றி. இரண்டாவது படத்தில் பெரிய ஹீரோ கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை, விதார்த்துடன் நடித்தது இனிய அனுபவம்.
ஒரு சின்ன கிராமத்தை மிக அழகாகக் காட்டியுள்ளனர். மிகுந்த வெயிலில் படம் எடுத்தோம் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. குழந்தைக்கு எப்படி அம்மாவாக நடித்தீர்கள் எனக்கேட்கிறார்கள். ஏன் ஒரு நடிகை அம்மாவாக நடிக்க கூடாதா இந்த ஸ்ட்ரீயோடைப் கேள்விகளை உடைக்க வேண்டும் என நினைத்தேன், அம்மாவின் உலகத்தை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன் அது இந்தப்படத்தில் நடந்தது. மருதம் மிக அற்புதமாக வந்துள்ளது" என்றார்.




