ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'டீசல்.' மணிவண்ணனின் உதவியாளர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். அதுல்யா ரவி, ஹரிஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர வினய் ராய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார், எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறியிருப்பதாவது: 'டீசல்' மக்களுக்கான படம். நாம் பெட்ரோல், டீசலைக் கடக்காத நாளில்லை. 1970க்குப் பிறகுதான் இங்கே பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. இந்தியர் ஒருவர் சம்பாதிக்கும் 100 ரூபாயில் 70 ரூபாய் எரிபொருளுக்கே செலவு செய்கிற மாதிரி ஆகிவிடுகிறது. அவற்றின் விலை ஏறி இறங்குகிற அரசியல் பற்றி நமக்குத் தெரியாது.
டீசல் உலகின் அண்டர்கிரவுண்ட் ஏரியாவில் இருந்து ஒரு ஹீரோ உருவாகிறான். அவன் மூலம் இந்தப் பிரச்னையை பேசியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து கதையைச் சொல்கிறேன். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை கமர்ஷியலாத்தான் சொல்ல வேண்டும். எளிமையான மக்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டும். அதைப் பொறுப்போடு சொல்கிறேன். என்கிறார்.