விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

விஜய் டிவியில் வெளியாகும் காமெடி ஷோக்கள் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் கே.பி.ஒய். பாலா. அதோடு தும்பா, சிக்சர், லாபம், நாய் சேகர் உள்பட பல படங்களில் காமெடியனாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஷெரிப் என்பவர் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்துள்ளார் பாலா. இவருடன் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் பாலாவின் பிறந்த நாளையொட்டி காந்தி கண்ணாடி படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது.
இயக்குனர் ஷெரிப் கூறியதாவது : “ 'காந்தி கண்ணாடி' எனக்கு மிக நெருக்கமான படம். நாங்கள் ஒரு உண்மையான, அர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பதை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.