ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.
''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.
தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.