பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டூடியோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் வாழ்த்துடன் கேக் வெட்டி அவர் கொண்டாடினார். பின்னர் அளித்த பேட்டியில் ''துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி. இன்றைய பிறந்தநாளில் இனிப்பான செய்தியை சொல்லப்போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால், அதே ராயல் பில்ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து, ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வரும் இதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் பாடல்களை எல்லா சூழ்நிலையிலும், எந்த உணர்விலும் கேட்கலாம். என் பாடல்கள் டாஸ்மாக் சரக்கு இல்லாமலே போதை ஏற்றுபவை'' என்றார். அவரை சந்தித்து வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும். முன்பே இதை வலியுறுத்தி இருக்கிறோம். விரைவில் அதை மத்திய அரசு செய்யும் என நம்புகிறேன்' என்றார். இளையராஜா பாடல்களால் வளர்ந்த ராமராஜனும் நேரில் வந்து இளையராஜாவை வாழ்த்தினார்.