என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

2025ம் ஆண்டின் முதல் அரையாண்டு நேற்றோடு முடிந்து, அடுத்த அரையாண்டு இன்று முதல் ஆரம்பமாகிவிட்டது. இதுவரையில் சுமார் 122 படங்கள் வரை கடந்த அரையாண்டில் வெளிவந்துள்ளது. அதே அளவில் அடுத்த அரையாண்டிலும் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி இந்த ஜுலை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜுலை 4ம் தேதி “3 பிஎச்கே, அஃகேனம், அனுக்கிரஹன், குயிலி, பறந்து போ, பீனிக்ஸ்” ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இவற்றில் '3 பிஎச்கே, பறந்து போ, பீனிக்ஸ்' ஆகிய படங்கள் ரசிகர்களுக்குத் தெரிந்த நட்சத்திரங்கள் நடித்துள்ள படங்களாக இருக்கின்றன. '3 பிஎச்கே' படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடித்துள்ளார்கள். 'பறந்து போ' படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி நடிக்க, ராம் இயக்கியுள்ளார். 'பீனிக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.
குடும்பப் பாங்கான படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவது கடந்த அரையாண்டில் குறிப்பிடும்படி உள்ளது. அது அடுத்த அரையாண்டிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.