சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

2025ம் ஆண்டின் அரையாண்டு நேற்றோடு முடிந்தது. கடந்த ஆறு மாதங்களில் நமது கணக்குப்படி கடந்த வெள்ளி ஜுன் 27 வரையில் 122 படங்கள் வரை வெளியாகி உள்ளன. கடந்த 2024ம் ஆண்டின் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 7 படங்கள் கூடுதலாக வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 234 படங்கள் வெளிவந்தன. அதே போல இந்த ஆண்டிலும் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் இன்னும் 100 படங்களுக்கும் அதிகமாக வெளியாகி, கடந்த ஆண்டு எண்ணிக்கையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த 2025ம் ஆண்டின் அரையாண்டில் லாபத்தைத் தந்த படங்களாக, “மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன்,” ஆகிய படங்கள் உள்ளன.
அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தந்த படங்களாக 'விடாமுயற்சி, தக் லைப், குபேரா,' ஆகிய படங்களைச் சொல்லலாம். ஏமாற்றம் தந்த படங்கள் என்று ஆரம்பித்தால் இன்னும் சில முன்னணி நாயகர்கள், காமெடி நடிகர்கள் ஆகியோரது படங்களையும் குறிப்பிடலாம்.
அடுத்த ஆறு மாதங்களில் 'தலைவன் தலைவி, கூலி, மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, இட்லி கடை, பைசன், டூட்” உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. முதல் அரையாண்டில் வந்த ஏமாற்றம், அடுத்த அரையாண்டில் இருக்காது என திரையுலகினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.