ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமா அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட மலையாள திரையுலகில் பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் தங்களின் பெற்றோரை போல நடிப்பிலோ டைரக்ஷனிலோ தங்களது பயணத்தை துவங்குவது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மாயா முதன்முறையாக நடிகையாக அறிமுகமாகிறார். இவர் கதாநாயகியாக அறிமுகமாகும் இந்த படத்திற்கு 'தொடக்கம்' (துடக்கம்) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற '2018' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார்.
சினிமா தயாரிப்பில் 25ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் விஸ்மாயா அறிமுகமாகும் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், டைரக்ஷன் துறையில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக தந்தையைப் போலவே அவரும் கடந்த 2018ல் ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஓரளவுக்கு வெற்றி படங்களையும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் பெரிய அளவில் மீடியாவில் வெளிச்சம் படாமல் வலம் வந்த விஸ்மாயாவும் தற்போது நடிகையாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.