'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' |
'தங்கமீன்கள்' படத்தில் அப்பாவுக்கும், மகளுக்குமான பாசத்தை காண்பித்து இருந்தார் ராம். 'பறந்து போ' படத்தில் அப்பாவுக்கும், மகனுக்குமான பாசத்தை சொல்கிறாராம். குறிப்பாக, இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் மனநிலை, பெற்றோர்களின் ஓட்டம். அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை காமெடியாக சொல்லி இருக்கிறாராம். முதலில் இந்த படத்தில் மிர்ச்சி சிவா மகனாக நடிக்க, ராம் மகனைதான் பலர் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். ஆனால், அவரோ, என் வாழ்க்கை சம்பவங்கள் இந்த படத்தில் இருக்கிறது. ஆனாலும், மகனை வைத்து என்னால் படமெடுப்பது சிரமம் என மறுத்துவிட, மிதுல் என்ற சிறுவன் நடித்து இருக்கிறான்.
படம் பார்த்தவர்கள் அவன் நடிப்பை புகழ்கிறார்கள். நாளை மறுநாள் (ஜூலை 4) படம் ரிலீஸ். இதேபோல் இன்னொரு மகனையும் கோலிவுட்டில் புகழ்கிறார்கள். அவர் பெயர் அம்ரித் ராம்நாத். மலையாளத்தில் 'வருஷங்களுக்கு சேசம்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். இப்போது சித்தார்த், சரத்குமார், தேவயானி நடிக்கும் '3பிஎச்கே' படத்தின் இசையமைப்பாளர். இவர் பிரபல கர்நாடக சங்கீத பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மகன். இந்த படமும் இந்த வாரம் களம் இறங்கிறது. அதேபோல், விஜய்சேதுபதி மகன் சூர்யாசேதுபதி நடித்த 'பீனிக்ஸ்' படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.