நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தக்லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்று வருவதால் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளார் கமல்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'கொண்டாட்டத்திற்கான நேரம் இதுவல்ல. மவுன ஒருமைப்பாட்டிற்கான நேரம் என நம்புகிறேன். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்புக்காக விழிப்புடன் இருந்து வரும் வீரர்கள் வீராங்கனைகள் மீது அமைதி எண்ணங்கள் செல்கிறது. நாட்டு மக்களாகிய நாமெல்லாம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல, சிந்தனைக்கான நேரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.