ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் | கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' | மதுரை படப்பிடிப்பை முடித்த 'பராசக்தி' குழு | ஜீ தமிழ் டிவிக்கு மாறிய மணிமேகலை | 2025ல் மீனாவின் முதல் 'கெட் டு கெதர்' | எல்லோர் மனதிலும் ஜெயலலிதா இருப்பார் : வேதா இல்லத்தில் ரஜினி நெகிழ்ச்சி பேட்டி | மோகன்லாலிடம் இருந்து பிரியாமணி கற்றுக்கொண்ட முக்கிய பாடம் | மஞ்சு வாரியர் பற்றி தவறாக பேசினேனா ? திலீப்பின் நட்பு இயக்குனர் மறுப்பு | சமந்தாவைக் கவர்ந்த கதாநாயகிகள் யார் யார் தெரியுமா? | அனுமதியின்றி பலாத்காரம் செய்தார் ; நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு |
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிராகன்'. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் 25 கோடியைக் கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு நாட்களில் சுமார் 15 கோடி வசூலும், நேற்று ஞாயிறன்று சுமார் 10 கோடி வசூலும் இப்படம் பெற்றிருக்கலாம் என்கிறார்கள். இளம் ரசிகர்கள் அனைவருக்கும் படம் பிடித்திருப்பதாலும், கல்லூரிக் கதை என்பதாலும் ரிபீட் ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என நம்புகிறார்கள்.
இந்த வாரம் முழுவதும் கூட இப்படத்திற்கான வரவேற்பு சிறப்பாகவே இருக்கும் என தெரிவிக்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் இப்படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் கூட கடந்த மூன்று நாட்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசூலித்துள்ளதாம். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டிற்கான முதல் பெரிய லாபகரமான படமாக இப்படம் அமையலாம்.