நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் | பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழ் சினிமாவில் நடிகராக அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து 'லவ் டுடே' படத்தை இயக்கியதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அடுத்து அவர் கதாநாயகனாக நடித்த 'டிராகன்' படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
'லவ் டுடே' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து 'லல்யபா' என்ற பெயரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அந்தப் படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அப்படத்தில் ஹிந்தி நடிகர் ஆமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.
'லவ் டுடே' படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், நடிகர் ஆமீர்கானை சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து, “நான் எப்போதும் சொல்வதைப் போல வாழ்க்கை எதிர்பாராதது…உங்கள் அருமையான வார்த்தைகளுக்கு நன்றி ஆமீர்கான் சார். வாழ்நாள் முழுவதும் இதைப் போற்றுவேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.