‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா நடிக்கும் ‛காந்தா' என்ற படம், தமிழ், தெலுங்கில் நவம்பர் 14ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் கதை, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது என்று தகவல். அவரின் வாழ்க்கையில் எந்த பாகத்தை எடுக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.
தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் சில இருண்ட பக்கங்கள், சர்ச்சைகளும் உண்டு என்பதால், அதை தொட்டு இருக்கிறாரோ இயக்குனர் செல்வமணி செல்வராஜ் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஓடிடியில் வெளியான தி ஷன்ட் பார் வீரப்பன் என்ற கதையை இயக்கியவர் செல்வமணி செல்வராஜ்.
இதேபோல், தமிழில் லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது. தியாகராஜ பாகவதர் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தது, பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, அதை தழுவி இந்த படம் உருவாகிறது என கேள்வி. தயாள் பத்மநாபன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் மற்றும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன்