பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா |

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் வந்து இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்ற பிறகு பான் இந்தியா வெளியீடாக எடுக்கப்படும் படங்கள் இரண்டு மொழிகளில் உருவாக ஆரம்பித்தன. பெரும்பாலும் அவர்களது சொந்த மொழியுடன், ஹிந்தியில் கூடுதலாக எடுக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக ஒரு சில தெலுங்கு பான் இந்தியா படங்கள் அப்படி உருவாகின.
ஆனால், 'கேஜிஎப்' புகழ் யஷ் தற்போது நடித்து வரும் பான் இந்தியா படமான 'டாக்சிக்' படத்தை கன்னடத்தில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் சேர்த்தே படமாக்கி வருகிறார்களாம். உலக அளவில் வெளியிட ஏதுவாக ஆங்கிலத்தில் எடுக்கிறார்கள். மற்ற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளில் சிலவற்றிலும் படத்தை டப்பிங் செய்ய உள்ளார்களாம்.
'கேஜிஎப் 2' படம் மூலம் 1000 கோடி வசூலையும், உலக அளவில் கவனத்தையும் ஈர்த்தவர் யஷ். அவர் நடித்து வரும் 'டாக்சிக்' படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, டொவினோ தாமஸ், மாளவிகா மோகனன், பசில் ஜோசப், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.