உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடிப்பில் பீரியட் படமாக உருவாகி வரும் படம் 'பராசக்தி'.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களில் நடந்து வந்தது. மதுரையில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவுற்றதாக படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அப்டேட் கொடுத்துள்ளார்.
“மீனாட்சி, மயில், மல்லி.. எனது அபிமான இடங்களில் ஒன்றான மதுரை கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது,” என்றும் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவிலுக்கு சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் சென்று வழிபட்ட புகைப்படத்தையும் சுதா ஏற்கெனவே பகிர்ந்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு பற்றி அவ்வப்போது தவறாமல் அப்டேட் கொடுத்து வருகிறார் சுதா.