நிறம் மாறும் உலகில் 4 ஹீரோயின்கள் | அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து! | பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! | பிளாஷ்பேக் : 4 பெயர்களில் நடித்த இளவரசி | பிளாஷ்பேக் : இயக்குனரை காதலித்து திருமணம் செய்த லட்சுமியின் தாயார் | விராட் கோலியைப் பாராட்டிய பாகிஸ்தான் நடிகை | ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் | கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' | மதுரை படப்பிடிப்பை முடித்த 'பராசக்தி' குழு |
90களில் முன்னணி கதாநாயகிகளாக இருந்தவர்கள் ரம்பா, மீனா, ரோஜா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்கள். இப்போதும் நெருங்கிய நட்பில் அவர்கள் மட்டுமல்லாது சங்கீதா, மகேஸ்வரி, ஸ்ரீதேவி என ஹீரியின்ஸ் நட்பு வட்டம் உள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ரோஜா, மீனா, ரம்பா, மகேஸ்வரி ஆகியோர் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இவர்கள் மேடையேறி உற்சாகமாக நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்த மீனா, “அன்பு, அரவணைப்பு மற்றும் பழைய நினைவுகளுடன் ஒரு அழகான மாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் சமீப காலங்களில் அடிக்கடி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுவும் இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இதுவே முதல் முறை.