கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

சென்னை : 'ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும்' என ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு போயஸ் கார்டனில் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு ரஜினி அளித்த பேட்டி: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ., தீபா அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு நான் வந்தது இது நான்காம் முறை. 1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன். 2ம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன்.
3ம் முறை என் மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை. அவர் இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன். அவர் நாமம் வாழ்க.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.