ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் | கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' | மதுரை படப்பிடிப்பை முடித்த 'பராசக்தி' குழு | ஜீ தமிழ் டிவிக்கு மாறிய மணிமேகலை | 2025ல் மீனாவின் முதல் 'கெட் டு கெதர்' | எல்லோர் மனதிலும் ஜெயலலிதா இருப்பார் : வேதா இல்லத்தில் ரஜினி நெகிழ்ச்சி பேட்டி | மோகன்லாலிடம் இருந்து பிரியாமணி கற்றுக்கொண்ட முக்கிய பாடம் | மஞ்சு வாரியர் பற்றி தவறாக பேசினேனா ? திலீப்பின் நட்பு இயக்குனர் மறுப்பு | சமந்தாவைக் கவர்ந்த கதாநாயகிகள் யார் யார் தெரியுமா? | அனுமதியின்றி பலாத்காரம் செய்தார் ; நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு |
தமிழில் 'பருத்திவீரன்' படத்தில் நடித்து பிரபலமானது மட்டுமல்ல அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர் நடிகை பிரியாமணி. தற்போது திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் 'ஆபிசர் ஆன் டூட்டி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரியாமணி பேசும்போது மோகன்லாலிடமிருந்து தான் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.
மோகன்லாலும் பிரியாமணியும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வெளியான 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். இது பற்றி அவர் கூறும் போது, “மோகன்லால் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் படத்தில் நடித்தபோது அவரது தாயார் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் கூட மோகன்லால் 6 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். மாலை படப்பிடிப்பு முடிவடைந்ததும் நேராக தனது தாயை கவனிக்க மருத்துவமனைக்கு சென்று விடுவார். அங்கேயே தங்கியிருந்து மறுநாள் அங்கிருந்தே படப்பிடிப்புக்கு தயாராகி கிளம்பி வந்து விடுவார்.
இதைப் பார்த்து நான் ரொம்பவே வியந்து போனேன். ஒருநாள் அவரிடம் கூட நீங்கள் ஒரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு அம்மாவின் அருகிலேயே இருந்து அவரை பார்த்துக் கொள்ளக் கூடாதா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் தொழிலையும் குடும்பத்தையும் ஒன்றாக எப்போதும் கலப்பது இல்லை. என்னால் என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாக இயக்குனர் பாதிக்கப்படக்கூடாது. எனக்காக யாரும் காத்திருக்கக்கூடாது.
படப்பிடிப்புக்கு வந்து விட்டால் குடும்பத்தை பற்றி யோசிக்க மாட்டேன். அதே போல இப்போது மருத்துவமனைக்கு சென்று விட்டால் சினிமாவைப் பற்றி யோசிக்க மாட்டேன்.. என் குடும்பம் தான் கண் முன்னே இருக்கும்.. இரண்டையும் சமமாக பிரித்து வைத்திருக்கிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு சினிமாவை அர்ப்பணிப்புடன் அவர் நேசித்து வந்ததை பார்த்து அதிலிருந்து நானும் புதிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார் பிரியாமணி.