சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகளுக்குள் ஒரு பொறாமை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் பலரும் நட்பாகவே பழகுகிறார்கள். ஒருவரை மற்றொருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்தார். அப்போது அவருக்குப் பிடித்தமான கதாநாயகிகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலளித்துள்ளார்.
“சிலரது நடிப்பு என்னை சமீபத்தில் வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் பெண்களின் நடிப்பை நேசித்தேன், அவர்கள் எடுத்த ரிஸ்க்கும் நேசிக்க வைத்தது. 'உள்ளொழுக்கு' படத்தில் பார்வதி, 'சூக்ஷ்ம தர்ஷினி' படத்தில் நஸ்ரியா, 'அமரன்' படத்தில் சாய் பல்லவி, 'ஜிக்ரா' படத்தில் ஆலியா பட், 'CTRL' படத்தில் அனன்யா பாண்டே, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' படத்தில் கனி, திவ்ய பிரபா, ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த ஆண்டும் அவர்களது சிறந்த படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.