மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பின் அந்த வரி விலக்கு இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாக தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் நிறைய ஆங்கிலப் பெயர்களை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
இன்று வெளியாகி உள்ள 'டிராகன்' என்ற பெயரும் ஆங்கிலப் பெயர்தான். இருந்தாலும் அந்த பெயருக்கு உரிய பொருத்தமான காரணத்தை படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரப் பெயர் D.Ragavan. பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண், ராகவனின் காதலை மறுத்துவிடுகிறார். ஏதாவது பட்டப் பெயருடன் கெத்தாக சுத்த வேண்டும் என நினைக்கிறார் ராகவன். அதனால் நண்பன் ஒரு ஆலோசனை சொல்கிறார். ஒரு பெண் காதலை ஏற்க மறுத்ததால், D.Ragavan என்ற ஆங்கில எழுத்தில் உள்ள 'ava' தமிழில் 'அவ' என்பதை நீக்கி விட்டு D.Ragan என்பதில் 'a'க்குப் பதிலாக 'o' சேர்த்து 'Dragon' எனப் பெயர் வைக்கிறார். அதனால்தான் படத்தின் பெயரும் 'டிராகன்'.
ஒரு பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…..