என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் கதைத் திருட்டு என்பது பல காலமாக இருக்கிறது. ஆனால், இனிமேல் கதைகளைத் திருடி படம் எடுத்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட முடியாது.
'எந்திரன்' படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் சொத்துக்களை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. சுமார் 10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை, பிஎம்எல்ஏ (PMLA) விதிகளின் படி 17 பிப்ரவரி அன்று சென்னை, அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார்கள்.
இந்த விவகாரம் இந்தியத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பெரும் வசூலைக் குவித்த 'எந்திரன்' படம் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழ் சினிமா மீதான இமேஜையும் குறைத்துள்ளது.
ஒரு திரைப்படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில், காப்பிரைட் வழக்கு ஒன்றில் பிஎம்எல்ஏ விதிகளின் படி சொத்துக்களை முடக்குவது, இந்தியாவிலேயே முதல் முறையாக இப்போதுதான் நடக்கிறது என்று சொல்கிறார்கள்.
'எந்திரன்' கதைத் திருட்டு விவகாரத்தில் அதற்காக வழக்கு தொடுத்த ஆரூர் தமிழ்நாடன், கடந்த பல வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த வழக்கு விவகாரத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி பல உதவி இயக்குனர்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது என்கிறார்கள். இதற்கு முன்பும் தமிழ் சினிமாவில் சில முன்னணி இயக்குனர்கள் இப்படி கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'இந்தியன் 2', தெலுங்குப் படமான 'கேம் சேஞ்ஜர்' ஆகியவை அடுத்தடுத்து தோல்வியடைந்தன. தற்போது கதைத் திருட்டு விவகாரத்தில் சொத்து முடக்கும் என்பது ஷங்கருக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது என திரையுலகத்தில் கருத்து நிலவுகிறது. ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் இப்படித்தான் சுழற்றி அடிக்கும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.