ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கோமாளி படத்தில் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், அதன் பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் அனுபமா பரமேஸ்வரன், கையடு லோகர், ஜார்ஜ் மரியன், கே.எஸ் .ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின், சினேகா உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது டிராகன் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 35 நிமிடங்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.




