மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சமீப காலமாக ரஜினி, கமல், விஜய், அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரஜினியின் பாபா, கமலின் ஆளவந்தான், விஜய்யின் கில்லி போன்ற படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூலித்தன. அதோடு விரைவில் விஜய்யின் சச்சின் படமும் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது.
இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படமும் மார்ச் மாதம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். 2016ம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரகனி, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். டி.இமான் இந்த படத்துக்கு இசை அமைத்திருந்தார்.