வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற அவர் பிரபாஸை சந்தித்தும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அவரிடத்தில் சில மணி நேரம் அமர்ந்து கதை கேட்ட பிரபாஸ், அந்த கதை தன்னை இம்ப்ரஸ் பண்ணி விட்டதால் கண்டிப்பாக கைவசம் உள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் கால்ஷீட் தருகிறேன் என்று உறுதி அளித்து இருக்கிறாராம்.
என்றாலும் தற்போது பிரபாஸ், ‛தி ராஜா சாப், ஸ்பிரிட், சலார்-2, கல்கி 2' உள்பட பல படங்களில் அடுத்தடுத்து நடிக்கப்போகிறார். இந்த படங்களில் அவர் நடித்து முடிப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதனால் இந்த படங்களில் பிரபாஸ் நடித்து முடித்ததும், ராஜ்குமார் பெரியசாமி அவரை இயக்குவார் என்று கூறப்படுகிறது.