மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
நாகசைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்த படம் ‛தண்டேல்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கில் நிகில் சித்தார்த்தாவை வைத்து ‛கார்த்திகேயா-2' படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் சந்து மொண்டேட்டி.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவை சந்தித்து தனது அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்ட சூர்யா, இன்னும் அந்த படத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லையாம். அப்படி அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்தால் முதலில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி விட்டு அதன்பிறகுதான் கார்த்திகேயா- 2 படத்தை இயக்குவாராம் சந்து மொண்டேட்டி. மேலும் தற்போது சூர்யா, ‛ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.