அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பிக்பாஸ் சீசன்-6, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றவர் ஜனனி குணசீலன். இலங்கையை சேர்ந்தவரான இவர், அதன்பிறகு சூப்பர் சிங்கர்-9, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாக கலந்து கொண்டார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‛லியோ' மற்றும் ‛உசுரே' போன்ற படங்களில் நடித்தவர், தற்போது ‛நிழல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஆரியன் என்ற சீரியல் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி. இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலில் கட்டு போடப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் ஜனனி. இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.