கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகிறது.
தற்போது இதன் தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியில் அரசன் படம் குறித்து கூறியதாவது, "அரசன் படத்தின் கதைக்களம் வடசென்னை உலகில் தான் வருகிறது. ஆனால், தனுஷ் இந்த படத்தில் இல்லை. ஏனெனில், தனுஷ் ஜெயிலில் இருந்தபோது இந்த கதைக்களம் நடைபெறுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு சரியான நேரத்திற்கு வருகிறார். கேரவனுக்கு எல்லாம் சிம்பு செல்வது இல்லை, நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்" என தெரிவித்துள்ளார்.




