பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் காலகட்டத்தில் நடைபெறுவதால் வட சென்னை படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான கதாபாத்திரங்கள் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிவடைந்தது. இதற்கு அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற நாட்களில் சென்னையில் தொடங்கவுள்ளது என்கிறார்கள்.
இந்த கட்ட படப்பிடிப்பில் புதிதாக நடிகர் விக்ராந்த் இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் கமலேஷ் இணைகிறார் என கூறப்படுகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு, விஜய் சேதுபதி, விக்ராந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.