சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கோல்கட்டாவைச் சேர்ந்த கங்குலி இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றத்தை ஏற்படுத்திய கேப்டன்களில் முக்கியமானவர். அவரது காலத்தில் சச்சின், சேவாக், டிராவிட், விவிஎஸ் லட்சுமண், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அடங்கிய வீரர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள்.
கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக எடுக்க உள்ளார்கள். அவரது கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். அவர் தற்போது பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிகிறது.
கிரிக்கெட்டை மையப்படுத்தி சில படங்கள் வந்தாலும் பயோபிக் படங்களைப் பொறுத்தவரையில் எம்எஸ் தோனி பற்றிய பயோபிக் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படமாக இருந்தது. அது போல கங்குலியின் பயோபிக் படத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறார்களாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.