ஃபயர்,Fire
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு- ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம்- ஜேஎஸ்கே
நடிகர்கள் -பாலாஜி முருகதாஸ், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், ஜேஎஸ்கே, சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி
இசை - டி கே
வெளியான தேதி- 14.02.2025
நேரம்-2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங்-2.5/5

கதை சுருக்கம்

பிசியோதெரபி மருத்துவரான பாலாஜி முருகதாஸை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். அந்த மிஸ்ஸிங் கேஸை இன்ஸ்பெக்டர் ஜேஎஸ்கே(ஜே சதீஷ் குமார்) விசாரணை செய்கிறார். அவருடைய விசாரணையில் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் ஆகியோரை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிய வருகிறது. மேலும் பல பெண்களையும் அவர் ஏமாற்றியது விசாரணையில் தெரிகிறது. இதனிடையே பாலாஜி முருகதாஸை உடனடியாக கண்டுபிடிக்கும் படி அமைச்சரான சிங்கம் புலி, இன்ஸ்பெக்டர் ஜே.எஸ்.கேவுக்கு அழுத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு நடந்தது என்ன, பாலாஜி முருகதாஸுக்கு என்ன நடந்தது, அமைச்சருக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதி கதை.

படம் எப்படி
சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் டாக்டர் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காசியின் கதையே இந்த ஃபயர் படம்.

நெகட்டிவ் ஹீரோவாக நடித்துள்ள பாலாஜி முருகதாஸ், காசி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். தனது வசீகர உடலால் பெண்களை மயக்கி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்பவராக சிறப்பாக நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, சாந்தினி தமிழரசன்,சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகிய நான்கு பேரும் தாராள கவர்ச்சி காட்டி அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளனர். துப்பு துலக்கும் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ஜேஎஸ்கே, எஸ்ஐயாக நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி, அமைச்சராக வரும் சிங்கம்புலி ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் ஜேஎஸ்கே. இயக்குனராக முதல் படத்திலேயே சமூக அக்கறை உள்ள கதையை எழுதி, சமுதாயத்தில் முகமுடியுடன் வாழும் காசி போன்றவர்களின் முகத்திரையை கிழித் தெறிந்துள்ளார்.

டி கே இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது, பின்னணி இசையும் ஓகே ரகம். சதீஷ்.ஜி யின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது.

பிளஸ் - மைனஸ்

பெண்களை ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றி பணம் பறிக்கும் மனிதர்கள் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல் ஏமாறும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்த ஃபயர் படத்தை கொடுத்துள்ளது பிளஸ் என்றாலும், நான்கு கதாநாயகிகளை எல்லை மீறி கவர்ச்சி காட்ட வைத்திருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. இன்ஸ்பெக்டராக நடித்துள்ள இயக்குனர் ஜேஎஸ்கே, ஒரு போலீஸ்காரனுக்கு உண்டான மிடுக்கு இல்லாமல் நடித்திருப்பது பெரிய மைனஸ். முதல் பாதியில் பாடல்கள் இல்லாமலும் இரண்டாம் பாதியில் மூன்று பாடல்கள் இருப்பதும் படத்திற்கு சற்று பலவீனம்.

ஃபயர்- காட்டுத்தீ

 

ஃபயர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஃபயர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓