ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிகர் திலீபுடன் இணைந்து படங்களில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். திலீப், நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்து கொண்டார். திலீப்புடன் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்திலிருந்து மஞ்சு வாரியருடன் நட்பாக பழகி வந்தவர் இயக்குனர் நாதிர்ஷா. மலையாளத்தில் 'அமர் அக்பர் ஆண்டனி, கேசு இ வீடிண்டே நாதன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து திலீப்புடன் நட்பில் இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவரது மகள் திருமணம் நடைபெற்ற சமயத்தில் அதற்காக மஞ்சு வாரியரை சந்தித்து அழைப்பு விடுக்க முயற்சித்து நேரம் கேட்டதாகவும் ஆனால் மஞ்சு வாரியர் தான் பிஸியாக இருப்பதாக முதலில் கூறிவிட்டு பின்னர் நாதிர்ஷாவின் தொலைபேசி அழைப்புகளை எடுக்க மறுத்துவிட்டார் என்றும் அவரே சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டார் என ஒரு பதிவு சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது.
மேலும் அதில் மஞ்சுவாரியார் பழையதை எல்லாம் மறந்து விட்டார் என்று நாதிர்ஷா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். ''அப்படி எந்த ஒரு தகவல் தொடர்பு எனக்கும் மஞ்சுவாரியருக்கும் நடக்கவில்லை, சோஷியல் மீடியாவில் அதுபோல நான் பதிவும் வெளியிடவில்லை. அது போலியானது.. இது வேண்டுமென்றே யாரோ இட்டுக்கட்டி உருவாக்கிய செய்தி'' என்று கூறியுள்ளார்.