நானியின் 'ஹிட்-3' படத்தின் டீசர் வெளியீடு | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மூன்று நாள் வசூல் எவ்வளவு? | 'கராத்தே பாபு' படம் குறித்து ரவி மோகன் வெளியிட்ட அப்டேட்! | தமிழில் சினிமாவாகும் ஹாலிவுட் வெப் தொடர் | குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சி! 'டிராகன்' படத்தை பாராட்டிய வசந்த பாலன் | நிறம் மாறும் உலகில் 4 ஹீரோயின்கள் | அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து! | பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! | பிளாஷ்பேக் : 4 பெயர்களில் நடித்த இளவரசி |
இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா, சிவாவுக்கு முன்பே திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர். பின்னர் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். கதாநாயகனாக, வில்லனாக என அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைகளின் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பாலா. அதுவும் அடிக்கடி திருமணம் மற்றும் திருமண முறிவு சர்ச்சைகளில் தான் இவரது பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா. இதற்கு முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த சந்தனா சதாசிவம் என்பவரையும் அவருக்குப் பிறகு பின்னணி பாடகியான அம்ருதா சுரேஷ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் அவர்களிடம் இருந்து பிரிந்தார் பாலா. மூன்றாவதாக டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள் கூட இவர்களது மண வாழ்க்கை நீடிக்கவில்லை.
பாலாவின் நான்காவது திருமணம் குறித்து மூன்றாவது மனைவியான எலிசபெத் பெரிய அளவில் குற்றச்சாட்டுகளையோ அதிருப்தி கருத்துக்களையோ வெளியிடவில்லை. அதேசமயம் பாலாவின் ரசிகர்கள் என்கிற போர்வையில் எலிசபெத்தின் சோசியல் மீடியா பக்கத்தில் அவரைப் பற்றி தரக்குறைவாக பலர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாலாவுடன் தான் பழகி வந்த சமயத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில நேரங்களில் தன்னுடைய அனுமதி இன்றி தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் பாலா என பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார் எலிசபெத்.
“மேலும் அதன் பிறகு போலீசார் என்னையும் என் தந்தையையும் மிரட்டினார்கள். எங்கள் திருமணமே போலீசார் முன்னிலையில் தான் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய பாலா குடும்பத்தினர் விரும்பவில்லை. அதற்கு காரணமாக ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி காலத்தை கடத்தினார்கள். அதனாலேயே தற்போது என்னுடன் உறவை எளிதாக முறித்துக் கொண்டு வேறு திருமணம் செய்து விட்டார். ஆனால் இப்படி தனக்கு வேண்டிய நபர்கள் மூலமாக என் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நாங்கள் ஒன்றாக இருந்த போது பாலா என்னை அடித்து கொடுமைப்படுத்தியது மோசமான வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிடுவேன்” என்று எச்சரித்துள்ளார் எலிசபெத்.