டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தமிழில் ‛தலைவி, சந்திரமுகி- 2' போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது பா.ஜ.,வின் லோக்சபா எம்.பி.,யாகவும் உள்ளார். இந்த நிலையில் கங்கனா அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணமான ஆண்களைதான் கங்கனா காதலிப்பார் என்று கூறப்படுகிறதே? என அவரை நோக்கி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஆவேசமாக பதில் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛திருமண கனவுகளோடு இருந்து வரும் ஒரு பெண் ஏற்கனவே திருமணம் ஆன ஆண்களை காதலித்தால் அது அந்த பெண்ணின் குற்றம், ஆணின் தவறு இல்லை. இப்படித்தான் இந்த சமூகத்தில் எந்த ஒரு சூழலாக இருந்தாலும் பெண்களை மட்டுமே குறை கூறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அந்த தவறை செய்த ஆணை குறை சொல்வதை விட, அந்த பெண் மோசமான உடை அணிந்திருக்கிறாள். இரவில் வெளியே செல்கிறாள் என்று பெண்களை டார்க்கெட்டை செய்து மட்டுமே குறை சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தவறான கண்ணோட்டம் இந்த சமூகத்தில் இருந்து வருகிறது. அதனால்தான் பெண்ணாக இருப்பதால் என்னை மட்டுமே இந்த சமூகம் குற்றம் சொல்கிறது. அதில் சம்பந்தப்பட்ட ஆணை குறை சொல்லவில்லை'' என்று ஆவேசமாக ஒரு பதில் கொடுத்திருக்கிறார் கங்கனா ரணாவத்.