சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாளத் திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்றான கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஜுன் 1ம் தேதி முதல் மலையாளத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம், கேளிக்கை வரி ஆகியவற்றை முன்னிறுத்தி அந்த ஸ்டிரைக் நடைபெற உள்ளது.
அந்த ஸ்டிரைக்குக்கு ஆதரவில்லை என 'அம்மா' என்றழைக்கப்படும் மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திங்களன்று கொச்சியில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ், பிஜு மேனன், பாசில் ஜோசப் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
“மலையாளத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் நடத்தும் இந்த ஸ்டிரைக்குக்கு 'அம்மா' ஆதரவு தராது,” என அறிவித்துள்ளனர். சங்கத்தின் 'அட்-ஹாக்' கமிட்டி அதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கெனவே மலையாளத் திரையுலகம் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சில தனி நபர்கள் நடத்த முயற்சிக்கும் இந்த ஸ்டிரைக் தேவையில்லாதது, பல சினிமா ஊழியர்களையும் இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.