பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிப்ரவரி 21 நேற்றைய தினம் 'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராமம் ராகவம், ஈடாட்டம், பல்லவபுரம் மனை எண் 666, பிறந்தநாள் வாழ்த்துகள்” ஆகிய ஆறு படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 'டிராகன், நி.எ.மே.எ. கோபம்' இரண்டு படங்கள்தான் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்துள்ளன.
தனுஷ் இயக்கியுள்ள 'நி.எ.மே.எ. கோபம்' படத்திற்கான விமர்சனங்கள் பரவாயில்லை ரகத்தில் உள்ளன. புதுமுக, வளரும் நட்சத்திரங்கள் என்பதால் தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகையும் சுமாராகவே உள்ளது. இருப்பினும் படம் முதல் நாளில் 3 கோடி வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்திற்கான விமர்சனம் நன்றாகவே வந்துள்ளது. இளம் ரசிகர்கள் இப்படத்தை விரும்பிப் பார்க்க வருவதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 8 கோடி வரை வந்திருக்கும் எனத் தகவல். இன்றும், நாளையும் அதை விட வசூல் அதிகமாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இரண்டு படங்களுமே தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. அங்கும் ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.