2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

இசையமைப்பாளர்கள் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சி நடத்தி வருவது போல, நடிகர் பிரபுதேவா முதன் முறையாக லைவ் கான்செப்ட் நிகழ்ச்சியை இன்று(பிப்., 22) சென்னையில் நடத்த இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அது மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கிய பாகமாக நடிகை சிருஷ்டி டாங்கேவும் இணைந்து இருந்தார். இந்த நிலையில் இந்த லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று கூறி ஒரு அதிரடி அறிவிப்பை தனது சோசியல் மீடியா பக்கமாக வெளியேற்றுள்ளார் சிருஷ்டி டாங்கே.
இந்த பதிவில் அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகிக் கொள்ளும் தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கே எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதற்கும் பிரபுதேவாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. ஆனால் பாகுபாடுகளை பார்த்துக் கொண்டு என்னால் அந்த இடத்தில் இருக்க முடியாது. இத்தனை வருடங்களாக நான் இந்த திரையுலகில் இருந்தும் எனக்கு தகுதியுடைய சில விஷயங்களுக்காக கூட நான் போராட வேண்டி இருப்பது உண்மையிலேயே என்னை மனம் நோக செய்கிறது.
அது மட்டுமல்ல தவறாக கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் சரிவர நிறைவேற்றப்படாத உத்தரவாதங்களும் என்னை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கின. இவைதான் நான் இந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய காரணங்கள். பிரபுதேவாவை இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. அவரை நாம் எப்போதும் கொண்டாடி வருகிறோம்.
ஆனால் மனதில் வைத்து போற்றி காலத்திற்கும் அசைபோடும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கப் போகும் இந்த நிகழ்வு எனக்கு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இதை நான் உங்களிடம் வருத்தம் தெரிவிப்பதற்கான விஷயமாக கூறவில்லை. நீங்கள் அனைவரும் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் சிருஷ்டி டாங்கே.