விராட் கோலியைப் பாராட்டிய பாகிஸ்தான் நடிகை | ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் | கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' | மதுரை படப்பிடிப்பை முடித்த 'பராசக்தி' குழு | ஜீ தமிழ் டிவிக்கு மாறிய மணிமேகலை | 2025ல் மீனாவின் முதல் 'கெட் டு கெதர்' | எல்லோர் மனதிலும் ஜெயலலிதா இருப்பார் : வேதா இல்லத்தில் ரஜினி நெகிழ்ச்சி பேட்டி | மோகன்லாலிடம் இருந்து பிரியாமணி கற்றுக்கொண்ட முக்கிய பாடம் | மஞ்சு வாரியர் பற்றி தவறாக பேசினேனா ? திலீப்பின் நட்பு இயக்குனர் மறுப்பு | சமந்தாவைக் கவர்ந்த கதாநாயகிகள் யார் யார் தெரியுமா? |
2025ம் ஆண்டில் பாலிவுட்டின் முதல் பெரிய வெற்றிப் படமாக 'சாவா' படம் அமைந்துள்ளது. லஷ்மண் உடேகர் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா, அக்ஷய் கண்ணா மற்றும் பலர் நடிப்பில், பிப்ரவரி 14ம் தேதி வெளியான ஹிந்திப் படம்.
எதிர்பார்ப்புக்கும் மேலாக இப்படம் வசூலைக் கொடுத்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 150 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சரித்திரப் படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. நேற்று முன் தினம் படம் வெளியான பின் வந்த இரண்டாவது சனிக்கிழமையன்று கூட இப்படம் நிகர வசூலாக 44 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
'புஷ்பா 2' படம் இதுபோல வசூலித்த 46 கோடி வசூலை 2 கோடி வித்தியாசத்தில் முறியடிக்க முடியாமல் போய்விட்டது. ஹிந்தித் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு படமும் படம் வெளியான இரண்டாவது வார சனிக்கிழமையில் இவ்வளவு வசூலைக் குவித்ததில்லை. இப்படத்தின் வெற்றியும், வரவேற்பும், வசூலும் பாலிவுட்டினரை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.