'புஷ்பா 2' டிரைலர் சாதனையை முறியடிக்காத 'கேம் சேஞ்சர்' டிரைலர் | அமெரிக்க வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்கள் | எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் |
இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒரு படம் மனநிறைவாக அமைந்துவிட்டால் இசை அமைத்து முடித்ததும் அந்த படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுவது வழக்கம். சமீபத்தில் விடுதலை படத்தின் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். தற்போது 'திருக்குறள்' படத்தின் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. திருவள்ளுவரின் வாழ்க்கை மூலம் திருக்குறள் பற்றி படம் பேசுகிறது. படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இசைகோர்ப்பு பணிகள் முடிந்ததும் படக் குழுவினரை அழைத்து பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளரும், இயக்குனருமான ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் கூறியதாவது: திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தைப் பார்த்த இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். இரண்டு பாடல்களை அவரே எழுதி இசையமைத்திருக்கிறார். தற்போது அனைத்து இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்துவிட்டு என்னை அழைத்தார். " முல்லைப் பூவின் வாசம் " பாடலுக்கு இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி அந்த பாடலை எனக்கு காண்பித்தார். அது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்தப் பாடல் நிச்சயம் 2025ம் வருடத்தின் சிறந்த பாடலாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனராக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர். என்றார்.