பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
28 வருடங்களுக்கு முன்பு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‛இந்தியன்'. இதன் இரண்டாம் பாகம் ‛இந்தியன்-2' என்கிற பெயரில் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இது தொடர்பான புரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் பம்பரமாக சுற்றி வருகிறார்கள். இந்த படத்தில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் ஒரு பக்கம், மறைந்த மனோபாலா, விவேக் இன்னொரு பக்கம் என பலரது பங்களிப்பு இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த்தின் படங்களில் ஆஸ்தான நடிகராக இடம்பெற்று வந்த நடிகர் ஜெகன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஷங்கரின் இயக்கத்தில் அவர் நடிப்பது இதுதான் முதல் முறை. அதே சமயம் இந்த படத்தில் நடித்தது குறித்த சந்தோஷத்துடன் தனது வருத்தத்தையும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஜெகன்.
இந்த படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இரண்டு நடிகர்களை ஆலோசனை செய்தபோது, ஷங்கரின் உதவி இயக்குனர்கள் ஜெகனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்கள். உடனே இயக்குனர் கே.வி ஆனந்துக்கு போன் செய்து இந்த கதாபாத்திரத்திற்கு தான் நினைத்து வைத்திருந்த நடிகர் பெயரையும் ஜெகன் பெயரையும் கூறி யார் பொருத்தமாக இருப்பார் என கேட்டதற்கு ஜெகன் தான் பொருத்தமாக இருப்பார் என கூறினாராம் கே வி ஆனந்த். அது மட்டுமல்ல ஜெகன் குறித்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் இயக்குனர் ஷங்கரிடம் பேசினாராம்.
அதன் பிறகு இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த தகவல் பற்றி கே.வி ஆனந்திடம் ஜெகன் பகிர்ந்து கொண்டார். அப்போதுகூட தான் ஷங்கரிடம் பேசிய விஷயம் குறித்து ஆனந்த் கூறவில்லையாம். நீண்ட நாட்களுக்கு பிறகு தான் கே.வி ஆனந்த் தனக்காக பேசியது தெரிய வந்ததும் நெகிழ்ந்து போனாராம் ஜெகன். அதேசமயம் சமீப நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒரு நடிகராக தனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை குறிப்பிடக்கூட இல்லை என்றும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ஜெகன், இந்தியன்-2 படத்தில் நான் நடித்துள்ளது முக்கியமான கதாபாத்திரத்தில் தான் என்று இப்போது வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.