இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
மலையாளத்தில் வெளியான ‛பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. தமிழகத்தை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிசியானார். தற்போது ஹிந்தியில் நிதேஷ் திவாரி இயக்கும் ‛ராமாயணா'படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். இந்த நிலையில் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக சாய்பல்லவி கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் சாய்பல்லவி அளித்த பேட்டியில், ‛‛நான் தெலுங்கில் நடித்த பிதா, லவ் ஸ்டோரி, சியாம் சிங்கராய், விராட்ட பருவம், எம்சிஏ இப்படி எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் தான். ஆனால் இந்த படங்களை எல்லாம்விட வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். அந்த படத்தில் எனக்கென்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன்,'' என்றார்.