கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. அவரது 'பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் இந்தியத் திரையுலகத்தையும் கடந்து உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்தது.
அவரது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தபடத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இப்படத்திற்கான முன்களத் தயாரிப்புப் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் ஹைதராபாத்தில் ஒரு 'ஒர்க் ஷாப்' நடத்த உள்ளார்களாம். அவர்களுக்கு நடிகர் நாசர் நடிப்புப் பயிற்சித் தரப் போகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்புடன் வசனப் பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி போன்றவையும் வழங்கப்பட உள்ளதாம்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளவர் நாசர். ராஜமவுலியின் இயக்கத்தில் வந்த 'பாகுபலி' படத்தில் பிஜ்ஜல தேவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.