'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரீரிலீஸ் கலாசாரம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கிய படங்களை மறுபடியும் ரீரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'பாகுபலி' படத்தை அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் வெளிவந்து நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'பாகுபலி' ரீரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா, “இந்த சிறப்பு நாளில், இந்த ஆண்டு அக்டோபரில், 'பாகுபலி' திரைப்படத்தை இந்திய மற்றும் சர்வதேச அளவில் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் மறுவெளியீடாக இருக்காது. இது எங்கள் அன்பான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும். சில புதியவற்றுடன் அற்புதமான ஆச்சரியங்களை எதிர்பார்க்கக் காத்திருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகம் 2015 ஜுலை 10ல் வெளியானது. இந்த வருட அக்டோபரில் அப்படத்தை ரீரிலீஸ் செய்யும் போது 10 ஆண்டுகள் நிறைந்திருக்கும். அதனால், அதன் 10வது ஆண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.