ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் இந்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. நாளை ஏப்ரல் 30ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஓட்டம் ஏறக்குறைய நிறைவுக்கு வருகிறது. அதன்பின் சில ஊர்களில் சில காட்சிகள் மட்டுமே தொடர்கிறது.
மே 1ம் தேதி 'ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி' உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் 'குட் பேட் அக்லி' படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்குகிறார்கள். இருந்தாலும் கடந்த 20 நாட்களாக இந்தப் படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே ஓடி வசூலித்துள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பாக இந்தப் படம் உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் எந்த வசூல் அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் 240 கோடி வரை வசூல் வந்திருக்கலாம் என்று தகவல். அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிகமாக வசூலித்த படமாக இந்தப் படம் அமைந்தது.
இருந்தாலும் இன்னும் 500 கோடி வசூல் என்ற அளவில் அஜித் போகாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு வருத்தமாகவே உள்ளது.