சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'தலைவன் தலைவி' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜூலை 25ல் படம் ரிலீசாகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடன் 'வாத்தி' படத்தில் நடித்த சம்யுக்தா, நடிகை சார்மி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், விஜய் சேதுபதி, சம்யுக்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




