நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த 2017ம் ஆண்டில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வெளியான படம் 'இவன் தந்திரன்'. இந்த படம் ஓரளவுக்கு பாராட்டுகளை பெற்றது. இதையடுத்து 2024ம் ஆண்டில் இவன் தந்திரன் 2ம் பாகத்தை அறிவித்தார் கண்ணன். இதில் கதாநாயகனாக வட சென்னை சரண் நடிப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் இந்த படத்தின் பணி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் இன்று இவன் தந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பை பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த படப்பிடிப்பை சுஹாசினி மணிரத்னம் ஆக் ஷன், கட் சொல்லி துவங்கி வைத்தார்.
இவன் தந்திரன் 2ம் பாகத்தில் கதாநாயகனாக வட சென்னை சரண் நடிக்கிறார். கதாநாயகியாக சிந்து பிரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜெகன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.